ஈரோட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 September 2022

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடத்தினர் , அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் (20/09/2022) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஈரோட்டில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தை பின்வரும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  • (01/01/2022) முதல் (30/06/2022) முடிய வழங்கப்படவேண்டிய 3% அகவிலைப்படி நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கிட வேண்டும். 
  • புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ 497/- ஆக உயர்த்தப்பட்டதை கைவிடவேண்டும்.
  • தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி 70 வயதினை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்திட வேண்டும்.
  • குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7850/- அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
  • ரயிலில் பயணிகளின் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயண கட்டண சலுகையினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • பணிநிறைவு நாள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 

என்று 7 கோரிக்கைகளை முன்வைத்து ஈரோட்டில் தமிழ்நாடு அரசு  அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்  மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தோழர் எஸ் சங்கரன் மாவட்டத் தலைவர், TNGPA, ஆர்ப்பாட்டத்தின் முன்னிலை மாவட்ட துணைத்தலைவர்கள்: தோழர்கள் ஜி ஹரிதாஸ், பி.ஆறுமுகம், பி எஸ் பிரசன்னா, எம்ஜிஆர் சுப்பிரமணியம், மாவட்ட இணைச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி. சிலம்பரசன்.

No comments:

Post a Comment