தேமுதிக 18ம் ஆண்டு விழா: ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு நம்பியூர் தேமுதிகவினர் இலவச நோட்புத்தகளை வழங்கினர்கள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 September 2022

தேமுதிக 18ம் ஆண்டு விழா: ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு நம்பியூர் தேமுதிகவினர் இலவச நோட்புத்தகளை வழங்கினர்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுசூரிபாளையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நமரபியூர் பேரூர் கழக செயலாளர் ஹீரோசெல்வம் முன்னிலையில்  கொடியேற்று விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 


நிகழ்ச்சியில் சிறப்பு அமைப்பாளர்கள் தேமுதிக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.


நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் புதுசூரிபாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் 70 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட் புத்தகங்கள், பென்சில், அழிப்பான் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்கள். இதைதொடர்ந்து நம்பியூர், எலத்தூர், கோசணம், இருகாலூர் உள்ளிட்ட கிளைகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர் 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நம்பியூர் பேரூர் கழக செயலாளர் ஹீரோ ஸ்டியோ செல்வம், கோசணம் வி.பொன்னுச்சாமி, அஞ்சானூர் ஊராட்சி கழக செயலாளர் கே.பி.பாலசுப்பிரமணியன்,  நம்பியூர் ஒன்றிய துணை செயலாளர் வி.டி.எஸ்.சசிகுமார், ஒன்றிய பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment