திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான .ஆ. ராசா அவர்கள் சமீபத்தில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் (15/09/2022) வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஆ. ராசா அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் S.T. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் .திரு கனகசபாபதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் க. அண்ணாதுரை மேலும் கட்சி நிர்வாகிகள் சார்பாக ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலந்துகொண்டனர்.
இந்த மனுவில் வேண்டுமென்றே இந்துக்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக, பிரிவுகளுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார் என்று இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆ.ராசா அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 153(A), 295, 295(A), 296, 298, 499, 504, 505 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சட்டப்படியான நடவடிக்கையை எடுக்குமாறு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
No comments:
Post a Comment