தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் பரப்புரை தொடக்க விழா 28.08.2022 ஞாயிறு அன்று மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் காங்கயம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் இரா.கணபதி குடும்பனார் அவர்கள் தலைமை தாங்கினார்.


கூட்டத்தை மிக சிறப்பாக கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மள்ளர் மக்களை சந்தித்து சிறப்பாக நடத்திய ஈரோடு மாவட்ட செயலாளர் ஆ.கிருஷ்ணன் மற்றும் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் த.ஆறுமுகம் ஆகியோருக்கு மாநில பொது செயலாளர் டாக்டர் கணபதி குடும்பனார்  சால்வை அணிவித்தார்.


திருப்பூர் மாவட்டத்திலிருந்து தாராபுரம் ராமபட்டணம் பிச்சைமுத்து, மாசணம், துரை, திருப்பூர் மாநகர அமைப்பாளர் ப.லிங்கேஸ்வரன், திருப்பூர் மாநகர தலைவர் விஜயகுமார், மண்ணரை பகவதி, அமுக்கியம் பூபதி, மூர்த்தி, ஈஸ்வரன், பழனிச்சாமி படியுர் பிரபாகரன், அமுதா, முதலிபாளையம் அடைக்கலம், பெரியசாமி, பன்னீர்செல்வம், அணைப்பாளையம் அங்கமுத்து,  புஷ்பா தியேட்டர் மகேந்திரன் நாச்சிபாளையம் நாகராஜ், சூர்யா, நல்லுார் பாண்டி ஆகியோர் தனித்தனியாக மீன்கொடி கட்டி வாகனத்தில் முன்னதாக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment