அருள்நிதி விஜயா திருமால்பதி வழிகாட்டுதல்படி துரியதவம் செய்யப்பட்டது. ஆழியாறு அறிவுத் திருக்கோயில் - விஷன் இயக்குநர், அருள்நிதி முனைவர் கே. பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி "செயல்விளைவு தத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர், எழுத்தாளர், அருள்நிதி.முனைவர் எண்ணமங்கலம் ஏ. பழநிசாமி "மனவளக்கலையும் நானும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அருள்நிதி T.A.மூர்த்தி "மனவளக்கலை பயிற்சிக்கு முன் மற்றும்பின் தனதுநிலை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், துணைப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி S.விஜயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அருள்நிதி K.சரவணன் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னிலை வகித்தார், அருள்நிதி K.சாந்தி அனைவரையும் வரவேற்றார்.
துணைப் பேராசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் அருள்நிதி கா.அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார். வாசிப்பே சுவாசிப்பு என சத்தியமங்கலம் மக்களுக்காக வாசிப்பை பரவலாக்கும், விதைகள் வாசகர் வட்டம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்து செயலாளர் செ. பரமேஸ்வரனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அருள்நிதி.N.முருகன் தமிழ்நாடு மின்சார வாரியம் நன்றியுரையாற்றினார், உலக நல வாழ்த்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment