ஈரோடு மாவட்டம், பவானி நகர நாம் தமிழர் கட்சி, பவானி நகராட்சி 6வது வார்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் செய்யக்கோரி பவானி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் அங்குள்ள மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
அதைத் தொடர்ந்து பவானி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவரிடம் பவானி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறார் பவானி நகராட்சி தலைவர். இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை சத்யாமுருகேசன், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை தொகுதி இணைச் செயலாளர் சி. கௌரி சூரியா, நாம் தமிழர் கட்சி பவானி நகர செயலாளர் மு.சசிகுமார், நாம் தமிழர் கட்சி பவானி நகர இணைச் செயலாளர் செ.சிவானந்தம், நாம் தமிழர் கட்சி பவானி நகர தொடர்பாளர் கு. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment