ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிபுதூர் அரசு மாதிரி பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஒன்றிய குழுத்தலைவரும் , சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ கலந்து கொண்டு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
உடன் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம் .சரவணன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, கொமராபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, வடிவேலு, அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கோமதி, வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் மாணவ , மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவில் 92 மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment