இந்த முற்றுகை போராட்டத்தின் பற்றி விசாரித்தபொழுது ஈரோடு மாவட்டம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலையில் சி.எஸ்.ஐ வளாகம் உள்ளது அவ் வளாகத்தில் பள்ளிகள் தேவாலயம் ஆகியவை உள்ளன இந்த வளாகத்தில் குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என அரசு கூறுகிறது ஆனால் அந்நிறுவனம் தங்களுக்குச் சொந்தமானது என கூறிவருகிறது இதனால் அந்த இடத்தில் எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள இப்பிரச்சினை கூறிய இடத்தில் கட்டுமானப் பணியினை சி.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மாலை முற்றுகை போராட்டம் நடக்க இருந்தது ஆனால் முற்றுகை போராட்டம் நடக்கும் முன்பாக கோட்டாட்சியர் சதீஷ்குமார் அவர்கள் சி.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது இனி பணிகள் தொடராது எனவே முற்றுகைப் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார், அவர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகைப் போராட்டத்தை இது பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் துணைத்தலைவர் கைலாசபதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மகளிரணி மாவட்டத் தலைவர் புனிதம் அண்ணாதுரை உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment