ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 20 க்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவை 20 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன்குமார் தனது சொந்த பயன்பாட்டிற்காக பூங்காவின் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணணுன்னி அவர்களிடம் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் செந்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பழனிச்சாமி, பெரியசேமூர் கிழக்கு மண்டல தலைவர் மெய்யானந்தம் ஓ.பி.சி அணி பொதுசெயலாளர் நிர்மல் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, வீரப்பன்சத்திரம் கிழக்கு மண்டல தலைவர் சரவணன் உட்பட பல பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் இம் மனுவானது கொடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment