திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ. பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ. பங்கேற்பு.

ஈரோடு மாநகர் அருள்மிகு வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில் (கோட்டை ஈஸ்வரன் கோயில்) திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று 08.09.2022 வியாழக்கிழமை காலை 10.35 மணி அளவில் நடைபெற்றது.


நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிஅவர்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜை, ராஜ கோபுர கலசம் தீர்த்தம் பூஜை, ஸ்ரீ வாருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்தங்களுக்கும் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் மஹா அபிஷேகம், தீபாராதனையில் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தார்கள்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்.

No comments:

Post a Comment