பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாதையை சரிசெய்த ஊராட்சி பெருந்தலைவர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாதையை சரிசெய்த ஊராட்சி பெருந்தலைவர்.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சி அணகாடு பகுதியில் மழையினால் நடைபாதை சீர்குலைந்துள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவசர உதவிக்காக மருத்துவமனை செல்ல முடியாமலும் விவசாய பொருட்கள் எடுத்துவர முடியாமலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். 


இதனால் பொதுமக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ அவர்கள் பார்வையிட்டு உடனடியாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் உடனடியாக நடைபாதை சரி செய்யப்பட்டது.


உடன் வார்டு மெம்பர் திரு. தங்கவேல் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரு. சேகர், மகேஷ், துரைசாமி சடையப்பன், கோவிந்தராஜ், விஜயன், குருசாமி, வேலுமணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment