ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 19/09/2022 இன்று காலை 11 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பி.ஜெகதீசன் தலைமை வகித்தார், மாநில துணைத் தலைவர் என்.சண்முகசுந்தரம், கண்டன உரை நிகழ்த்தினார், மாநில பேச்சாளர் சிங் பிரபாகரன் சிறப்புரையாற்றினார், மாவட்ட நகரமைப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment