ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இண்டியன் பாளையம் ஊராட்சியில் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் இண்டியன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் , மாக்கினாங் கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், அசோகன், தங்கவேல், மூர்த்தி, முருகேஷ், சாமிநாதன், சுப்பிரமணியம், சண்முகம், முனீஸ்வரன், அருண் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment