பேரணி மருத்துவமனை வளாகத்தில் துவங்கி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்த்குமார் கலந்துகொண்டார் மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் கே.ஆர் முத்தையா, மருத்துவமனை தலைமை மருத்துவர் பி. எஸ்.ராதாகிருஷ்ணன் அவரும் இணைந்து இப்பேரணியை துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணி குறித்து ராதாகிருஷ்ணன் கூறியபோது தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது பலரும் மருத்துவமனையில் கண்தானம் செய்ய பதிவு செய்து கொள்கின்றனர்.
அவர்கள் இறந்தபிறகு 6 மணி நேரத்திற்குள் அவரது கார்னியா எனப்படும் விழித்திரை மருத்துவர்களால் அகற்றப்பட்டு கண் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படும் இதன்பிறகு விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் விழித்திரையை பாதிக்கப்பட்டவர்களின் கண்களுக்கு பொருத்தப்பட்டு பார்வை ஏற்படுத்தப்படும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் சில நோய்களாலும், விபத்தினாலும், விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நாம் இறந்த பிறகு கண்தானம் செய்வதன் மூலம் கண் பார்வை கொடுக்கலாம்.இலங்கையில் பலர் முன்வந்து கண்தானம் செய்கின்றனர் ஆனால் இந்தியாவில் கண் தானத்திற்கு பதிவு செய்தவர்கள் இறந்துவிட்டாள் அவர்களது உறவினர்கள் தகவல் தெரிவிப்பதில்லை எனவே போதிய அளவு விழித்திரை கிடைக்கப்படுவது இல்லை இதுகுறித்து விழிப்புணர்வு வெளிப்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடக்கிறது என்று அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இறந்தால் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு விழித்திரையை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர் அதே போல் கண் தானம் செய்பவர் இறந்துவிட்டாள் அவர்களது உறவினர்கள் தகவலை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அகர்வால் மருத்துவமனையில் கண் வங்கி இருக்கிறது கண்தானம் செய்ய விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் உரிய உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் ௭ன்று இவ்விழிப்புணர்வு பேரணியில் அவர் கூறினார்.

No comments:
Post a Comment