பசுவணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

பசுவணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் மலை பகுதி, குத்தியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பசுவணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு 3வது வார்டு உறுப்பினரும், சத்தியமங்கலம் கிழக்கு அஇஅதிமுக ஒன்றிய  செயலாளர்  என். எம்.எஸ்.நாச்சிமுத்து  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை வாங்கினார். 


உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பசுவணாபுரம் கிளை செயலாளர் மாதேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நித்தியா சசிகுமார், எக்கத்தூர் கிளை  செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் ஐயப்பன், வேலுமணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.  


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment