அரசு பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

அரசு பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் வழங்கினார்கள்.



நிகழ்வில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி, கதிர்வேல், சன்முகம், கலந்து கொண்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவானந்தம், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment