ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அஇஅதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 114 பிறந்த நாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி யில் அறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு சத்தியமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் தேவ முத்து, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சோழா தன சேகர், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment