ஈரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

ஈரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்தரும் வாரணாம்பிகை உடனமர் அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன சொர்ணபந்தன இந்த மகா குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.


இவ்விழா கடந்த ஆவணி 15 ஆம் நாள் (13/08/2022) விநாயகருக்கு கணபதி ஹோமம், தனபூஜை நவக்கிரக ஹோமம் முதல் தொடங்கியது, இதன் தொடர்ச்சியாக இன்று ஆவணி 23 ஆம் நாள் (08/09/2022) காளை 5.30 மணியளவில் 8 ஆம் கால யாகபூஜை நடைபெற்றது. மேலும் விமான ராஜகோபுரங்கள், பரிவார மூர்த்தங்களுக்கு, கபாலீஸ்வரர் சுவாமிக்கு புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு இவ்விழா கோலாகலமாக  நடைபெற்றது. 


மாலை 5 மணியளவில் மகா அபிஷேகம், தீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது மகா கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் அலைகடலென திரண்டு கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர், இதன் பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

இவ்விழாவில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரஸ்வதி ,ஈரோடு மாவட்ட மேயர் நாகரத்தினம் ,துணை மேயர் செல்வராஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி. சிலம்பரசன். 

No comments:

Post a Comment