ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங் கோம்பை ஊராட்சி கணபதி நகரில் MGNREGS இத்திட்டத்தின் மூலம் 35 இலட்சம் மதிப்பீட்டு பேவர் பிளாக் ரோடு மற்றும் காங்கிரட் ரோடு பணிகளை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ ஆய்வு செய்தார்.
உடன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள், மாக்கினாங் கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், அரசூர் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் டி.சசிகுமார், ஒன்றிய மாணவரணி சந்தோஷ் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்கவேல், முருகேஷ், பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment