இன்று ஈரோடு தினம். சரியாக 151 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 16.09.1871ல் ஈரோடு நகர பரிபாலன சபை என்ற பெயரோடு துவங்கிய ஈரோடு, பின்பு ஈரோடு நகராட்சியாக மலர்ந்தது. 1979 ல் ஈரோடு பகுதி பெரியார் மாவட்டமானபோது மாவட்டத்தினுடைய தலைநகரமாகியது. பின்பு ஈரோடு மாவட்டமாக பெயர் மாற்றம் பெற்றது. நகர பரிபாலன சபை நிலையிலிருந்து 137 ஆண்டுகளுக்குப் பிறகு 2008ம் ஆண்டில் ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே இன்றைய தினமான 16.09.2022 என்பது ஈரோட்டின் 151 வது ஆண்டாகும்.
அதை முன்னிட்டு ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன், ஈரோட்டின் வரலாற்றை ஒரு காணொளியாக தயாரித்துள்ளது. இந்த காணொளியை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப அவர்கள் , மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.S நாகரத்தினம், துணை மேயர் திரு.V செல்வராஜ், மாநகர ஆணையாளர் k சிவகுமார் ஆகியோரது முன்னிலையில் வெளியிட்டார். இதில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் திரு.M சின்னசாமி, செயலாளர் S கணேசன், இணைசெயலாளர் MC ராபின், மக்கள் தொடர்பு அலுவலர் RG சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment