தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க அரசால் உயிர்த்த பட்டிருக்கும் மின்கட்டணம் உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆ.இ.அ.தி.மு.க. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்று (16/09/2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கழக இடைக்கால பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி. கே. பழனிச்சாமிஅவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முன்னாள் அமைச்சர், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு கே.வி.இராமலிங்கம் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தென்னரசு அவர்களும், திரு.பாலகிருஷ்ணன் அவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வகுமார் சின்னையன் அவர்களும், மாவட்ட அவைத்தலைவர் பி.சி ராமசாமி அவர்கள் உட்பட ஏராளமான ஆ.இ. அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment