புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகரம் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட  செயலாளர், அமைப்பு  செயலாளர், கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 


உடன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, பள்ளியின் தலைமையாசிரியர் தேவராஜ், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் மவுத்தீஸ்வரன், புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, மயில்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன்,  நம்பியூர் ஒன்றிய  செயலாளர் தம்பி சுப்பிரமணியன், கொளப்பலூர் பேரூர் செயலாளர் தங்கராஜ், சக்தி சண்முகம், ஜெபஸ், கே.ஜி.சதீஷ், சத்தியமங்கலம் நகராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, ஜோதி, கவின்குமார், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நிகழ்வின் போது உடன் இருந்தார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment