ஈரோட்டில் அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

ஈரோட்டில் அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி ரோடு ஈரோடு நகரில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இவ்விழா ஆவணி மாதம் 20 ஆம் நாள் (05/09/2022) திங்கட்கிழமை காலை முதல் விழாக்கள் ஆரம்பித்து இதன் தொடர்ச்சியாக ஆவணி மாதம் 22 ஆம் நாள் (07/09/2022) புதன்கிழமை காலை 07.30 மணிக்கு (மங்கள இசை, ஸ்ரீ விநாயகர் பூஜை, சுவாமிக்கு காப்பு கட்டுதல், நான்மறைகள்   ரட்சிக்கும்  நாயகனுக்கு நான்காம் கால யாகபூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ர தானம், மற்றும் யாகசாலைகளில் இருந்து கலசங்கள்  திருக்கோவிலுக்கு அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்  மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்று தொடர்ந்து பூஜைகள் மற்றும்  பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது, மாலை 5 மணியளவில் ஸ்ரீசக்திவிநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறவுள்ளது, இரவு 7 மணிக்கு சுவாமி திரு வீதி உலா காட்சி நடைபெறும்.


08/09/2022 - வியாழக்கிழமை முதல் காலை 7.30  முதல் 9.00 மணிக்குள் 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது, இவ்விழாவில் கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (திரு. தென்னரசு) அவர்களும்  (கு. இராஜகோபால்) செயல் அலுவலர், சிவராம சூரியன் (தக்கார்), திருக்கோவில் அர்ச்சகர்கள்  (சிவகாமி சிரோமணி வி.குஞ்சிதபாதம் சிவாச்சாரியார், சிவகாமி சிரோமணி ஞானஸ்கந்த பால விக்னேஷ் சிவாச்சாரியார்) கும்பாபிஷேக தலைமை மற்றும் சர்வ சாதகம்: சிவகாமி சிரோமணி (சிவகாமி  வாசஸ்பதி, சுபஸ்ரீ ச சந்திரசேகர சிவாச்சாரியார் திருவானைக்கோவில் திருச்சி) உப சர்வ சாதகம் வி குழந்தை வேலாயுதசுவாமி சுகாச்சார்யார் மற்றும் விழா தலைமைக் குழு தலைவர் திரு. சீனு ( MRF) மற்றும் பொதுமக்கள் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் .


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சிலம்பரசன்.

No comments:

Post a Comment