ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா (போஷன் பா) "சமுதாய வளைகாப்பு விழா" நடைபெற்றது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ முன்னிலையில் தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர். ஜானகி ராமசாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன், அரியப்பம்பாளையம் திமுக பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில் நாதன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ஜெயராஜ், மாணிக்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) பிரேம்குமார், மருத்துவ அலுவலர் பிரபாவதி மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment