கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி பங்கேற்பு.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட குழந்தைகள் மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.


மேலும் இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி புவனேஸ்வரி, மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கணபதி, பேரூராட்சி தலைவர் திருமதி செல்லம்மாள் சரவணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மயில், பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகேயன், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் கார்த்தி, அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும் அறம் அறக்கட்டளையும் நிறுவனத் தலைவர் திருமதி கிருத்திகா ஷிவ் குமார் கர்ப்பிணி பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார், ஸ்மார்ட் கிட்ஸ் நிறுவனர் திருமதி ஜெயந்தி கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால உணவு முறை மற்றும் உடல் பராமரித்தல் பற்றி ஆலோசனை வழங்கினார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மொடக்குறிச்சி செய்தியாளர் பூபாலன்.

No comments:

Post a Comment