அறம் அறக்கட்டளையின் வீடு தேடி மருத்துவ சேவை துவக்க விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 September 2022

அறம் அறக்கட்டளையின் வீடு தேடி மருத்துவ சேவை துவக்க விழா.

ஈரோடு  மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகிரி, சின்னியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகத்தில் கூடுதல் சேவையாக வீடு தேடி மருத்துவ சேவை துவங்கப்பட்டு உள்ளது.


இந்த சேவையின் மூலம் மருத்துவமனை வர இயலாத உடல் உபாதை கொண்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் வீடு தேடிச் சென்று மருத்துவ சேவையை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் வீடு தேடி மருத்துவ சேவை வழங்கும் வாகனத்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கினார். 


இந்த சேவையை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும்  கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment