எஸ்.டி.பி.ஐ கட்சியின் "சனாதன எதிர்ப்பு பேரணி". - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

எஸ்.டி.பி.ஐ கட்சியின் "சனாதன எதிர்ப்பு பேரணி".

ஈரோட்டில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் "சனாதன எதிர்ப்பு பேரணி" - SDTU தொழிற்சங்க மாநில பொருளாளர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.


சனாதனத்தின் உயிர் நாடியை உலுக்கிக்கொண்டிருக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144வது  பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு மாநகரில் சனாதன எதிர்ப்புப் பேரணி ஈரோடு சம்பத் நகரில் துவங்கி பன்னீர்செல்வம் பூங்கா பெரியார் சிலை வரை நடைபெற்றது.


இப்பேரணியில் SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் J.M. ஹசன் பாபு, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது  லுக்மானுல் ஹக்கீம், மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் M.ஜமால்தீன், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளர் ம.ஃபார்ஹான் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.முனாஃப், ஜம்பை ரபீக், சமூக ஊடக அணியின் மாவட்ட தலைவர் வாசில்,  பவானி தொகுதி தலைவர் H.முஹம்மது ஜஃபிர், இணைச்செயலாளர் லியாகத் அலி, ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் I.பக்ருதீன், வீரப்பன்சத்திரம் பகுதி ஒருங்கிணைப்பாளர்  ஷாஜகான் மற்றும் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


 - தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக பூபாலன். 

No comments:

Post a Comment