ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில் இயங்கிக் கொண்டு வரும் கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை அந்தப் பகுதியில் வெகுநாட்களாக வலுப்பெற்று வருகிறது. இதனை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஆர் சசிகுமார், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பின்பு கொடுமுடி கூட்டம் சிவகிரி சந்தையில் உள்ள கல்லூரி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் அரச்சலூர் மக்கள் நீதி மையம் பேரூர் செயலாளர் மணிகண்டன், அரச்சலூர் 9-வது வார்டு செயலாளர் இராமச்சந்திரன், மக்கள் நீதி மைய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்.
No comments:
Post a Comment