ஈரோட்டில் ஆயிரம் ஏக்கர் நில மீட்பு போராட்டம், - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

ஈரோட்டில் ஆயிரம் ஏக்கர் நில மீட்பு போராட்டம்,

ஈரோடு மாவட்டம் அரச்சலூர், வடுகபட்டி, நஞ்சை ஊத்துக்குளி, கிராமங்களிலுள்ள  பூமிதான வாரியம்- நில குடியேற்ற சங்கம்- நிலச்சீர்திருத்த துறை, வழங்கப்பட்ட விவசாய நிலங்களில் அரசின் விதிமுறைகளுக்கு எதிராக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய  நிலங்களை மீட்டு மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில மீட்பு போராட்டம் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தலித் விடுதலைக் கட்சி மாநில இணைப் பொதுச் செயலாளர் சகுந்தலா தங்கராஜ், மாநில அமைப்பாளர் வெ.ஆறுமுகம் , ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எம் கே ஆறுமுகம் , மாவீரன் பொல்லான்  பேரவை பொதுச்செயலாளர் வி.எஸ்.சண்முகம், தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர் பொன் சுந்தரம் , இந்திய கணச்சங்கம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் என்.கே. துரைசாமி, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 - தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கொடுமுடி பூபாலன். 

No comments:

Post a Comment