புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 September 2022

புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட அங்கன்வாடி மையத்தை  மறு சீரமைப்பு செய்து, புதுப்பொலிவுடன் அமையப் பெற்றுள்ள அங்கன்வாடி மையத்தை  சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திமுக செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


உடன் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் எம்.சரவணகுமார், நகராட்சி பொறியாளர் ரவி, நகராட்சி அலுவலர் சக்திவேல்,  அங்கன்வாடி மேற்பார்வையாளர் சிவகாமி, அங்கன்வாடி பணியாளர் நிர்மலா, 13வது செயலாளர் எஸ்.கே.சுப்பிரமணி, சத்தியமங்கலம் நகர மாணவரணி அமைப்பாளர் சு.சுரேஷ்குமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து  கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment