சத்தியமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.மணி மற்றும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் தலைவர்: எஸ்.என். ஜவஹர், பொருளாளர்: சா.கி.நாகராஜ், துணைத்தலைவர்: எஸ்.ஏ.ஜாகிர் உசேன், துணைச் செயலாளர்: ராம்குமார் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் புதுப்பித்தலும் புதிதாக உணவு வணிகர்களுக்கு பதிவும் செய்யப்பட்டு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹோட்டல், பேக்கரி, மளிகை மற்றும் சிறு உணவு வணிகர்கள் 90க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான ஊட்டச்சத்து மிக்க உணவினை பொதுமக்களுக்கும் வழங்குவது பற்றி உணவு வணிகர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தரப்பட்டது. சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ள உணவு வணிகர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சத்தியமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் மேற்கண்ட முகாமிற்கு ஏற்பாடு செய்து பதிவுச் சான்றிதழ் உடனடியாக வழங்கியும் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களும் பெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன்மூர்த்தி.

No comments:
Post a Comment