ஈரோடு மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பாக அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதில் கட்டிடம் கட்ட முயற்சித்து வருவதையும், அவ்விடத்தில் இருந்த பழமையான வேப்பமரத்தை வெட்டியது போன்ற சட்டவிரோத செயல்களை புரிந்த சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்க நிர்வாகிகள் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக ஒன்று கூடி பேரணியாக சம்பத் நகர் கொங்கு கலையரங்கம் திருமண மண்டபத்திலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.இந்நிகழ்விற்கு அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் நில அமைப்பு இயக்க தலைவர்
ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமையும் இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையும் வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர் பழனிச்சாமி நெசவாளர் அணி மாநில செயலாளர் ஜெகநாதன் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவின் நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி சூரம்பட்டி கிழக்கு மண்டல தலைவர் சிவக்குமார் காசிபாளையம் கிழக்கு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment