ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் சின்னபுரம் அருகில் உள்ள சபா திருமண மண்டபத்தில் ஈரோடு சூரியசக்தி தடையில்லா மின் வினியோக மின்கலம் வர்த்தகர்கள் சங்கத்தின் குடும்ப சந்திப்பு விழா நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது சிறப்பு நிகழ்வாக ஈரோடு தமிழன்னை கலைக்கூடத்தின் பன்முக கலைஞரும் சிரிப்பு யோகி சுப்புவின் சிரிப்பு யோகா சிரிப்பு கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் கொக்கிலியக் கலைஞர் (கட்டைக்கால்) ரமேஷின் கொக்கி லிய நடனமும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த தம்பதியருக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
மேலும் ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரத்தில் அமைந்துள்ள P.K.P பதின்ம (மெட்ரிக் குலேஷன்) மேல்நிலைப்பள்ளி நிறுவனரின் நூற்றாண்டு விழா மற்றும் சுதந்திர தின 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியருக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை வரவேற்று ஈரோடு தமிழன்னை கலைக்கூடத்தின் சார்பாக கொக்கிலியக்கால் ( கட்டக்கால் ) கலைஞர் ரமேஷ் அவர்களின் சிறப்பு நிகழ்வு தப்பாட்டத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தனர்.

No comments:
Post a Comment