ஈரோடு மாவட்ட துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு சோதனை அடிப்படையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 September 2022

ஈரோடு மாவட்ட துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு சோதனை அடிப்படையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட துவக்கப்பள்ளிகளில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் சோதனை அடிப்படையில் முன்னோட்டம் பார்க்கப்பட்டது, இத்திட்டம் வருகின்ற 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைக்கவுள்ளார்.


கடந்த சில நாட்கள் முன்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான  திட்டத்தை  தமிழக அரசு அறிவித்தது, இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள  துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் எவ்வாறு சிற்றுண்டியை விரும்புகிறார்கள், சரியான நேரத்திற்கு மாணவர்களுக்கு சிற்றுண்டி கிடைக்க மாணவர்களுக்கு எவ்வளவு தேவையான சிற்றுண்டிகள் வேண்டும் ௭ன்று பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது ௭ன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர்.


இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் காளைமாட்டுச் சிலை அருகில் பாலசுப்ராயலு வீதியில் உள்ள  ஈரோடு மாநகராட்சி துவக்க  பள்ளியில் இன்று  காலை ஈரோடு மாநகராட்சி மேயர் திரு.நாகரத்தினம், திரு.எம்.பி கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் திரு.சிவக்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளால் கலந்துகொண்டு  அப்பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி வழங்கினர், மாணவ மாணவியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிற்றுண்டி  சாப்பிட்டனர்.

 

- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் சிலம்பரசன்.

No comments:

Post a Comment