ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அனைத்து சனநாயக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்த அருணா ஜெகதீசன் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மீதுள்ள குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் அமைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட முன்விடுதலையை நீக்கம் செய்து இந்திய உச்சநீதிமன்ற மன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கில் தலையிட்டு 11 குற்றவாளிகளையும் சிறையில் அடைக்க வேண்டும்,நீதியை மறைத்த குஜராத் அரசை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை தலைவர் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார், இரத்தினசாமி, நிலவன் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றினர், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். மற்றும் அனைத்து சனநாயக இயக்கங்களின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment