கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்,  கடத்தூர் ஊராட்சி, பள்ளிக்கூடம் பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ம் - வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழாவானது பள்ளி தலைமையாசிரியர்  தலைமையில் நடைபெற்றது.


நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடையே உரையாற்றும் போது அரசு பள்ளியில் பயின்று பட்டப் படிப்பிற்கு செல்லும் மாணவியர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதா மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தது குறித்தும் மற்றும் இனிவரும் காலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வரப்போகின்றது என்பதையும் தெரிவித்தார். பின்பு அனைவருக்கும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்  ராணி சிதம்பரம்,  கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. கோமதி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னாள் ஒன்றி துணை செயலாளர் மைக். பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ். பழனிச்சாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பா.அல்லாபிச்சை, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜீ. சுஜாதா, ஒன்றிய துணை செயலாளர் பெ.வேலுச்சாமி, செந்தில்குமார், கடத்தூர் செல்வம், கடத்தூர் பழனிச்சாமி,  நம்பியூர் கருப்பட்டி ஆனந்தன்,  ஆசிரிய பெருமக்கள் மற்றும் திமுக  நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  பொதுமக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து  கொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment