ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சி, மல்லியம் துர்க்கம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம் அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ இடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். உடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேசன்(எ) செந்தில்நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ ஊ) சுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) பிரேம்குமார், ஊராட்சி செயலாளர் பசுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment