அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுமதி தலைமையில் நடைபெற்றது.


நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லோகநாதன் வரவேற்புரை ஆற்றினார். அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் பேரணியை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் அந்தியூர் அரசு மருத்துவர் காவிதா மருத்துவர் சங்கர் போக்குவரத்து ஆய்வாளர் தனசேகரன் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 


தலைமை மருத்துவ அலுவலர் விஸ்வேஸ்வரன் அந்தியூர் பேரூராட்சி உறுப்பினர்கள் பத்மநாபன், கீதா சேகர், உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன், தமிழாசிரியர் சம்பத், பெத்துசாமி துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் சிறப்பாக இசை முழக்கம் முலம் விழிப்புணர்வு பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மிக சிறப்பாக  நடத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித். 

No comments:

Post a Comment