ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி, அங்கண கவுண்டன்புதூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை" கலைஞரின் வருமுன் காப்போம்" சிறப்பு மருத்துவ முகாம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ குத்துவிளக்கேற்றி திட்டத்தினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
உடன் ஒன்றியக் குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள், திமுக நிர்வாகி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment