ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் இப்பகுதியை சேர்ந்த தாண்டாய் என்ற மூதாட்டி அவர்கள் உறவினர்களுடன் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்று அளித்தார்.
அவ்மனு குறித்து விசாரித்த பொழுது எனக்கு சொந்தமான 1800சதுரடி நிலத்தை அவரது மகள் ஸ்ரீரங்கம்மாள்க்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார் இந்நிலையில் 100 வயதைக் கடந்த மூதாட்டி தாண்டாய் என்பவர் இடத்திற்கு அருகில் வசிக்கும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் காளியப்பன் என்பவர் தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தாண்டாய் அவரது உறவினர்களுடன் ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
No comments:
Post a Comment