ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள அருள் தரும் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது, இவ்விழா கடந்த புரட்டாசி மாசம் 09 ஆம் நாள் (26/09/2022) அன்று மாரியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் விழா துவங்கியது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் 18ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு (05/10/2022) அருள்தரும் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு பக்தர்களால் 108 பால்குட அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது, இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீமாரியம்மனை தரிசித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பெரிய மாரியம்மனுக்கு தீர்க்க சுமங்கலி அலங்காரம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது . இவ்விழாவை முன்னிட்டு ஈரோடு மக்கள் அனைவரும் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment