காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 October 2022

காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம்.

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் (கமலாலயம்)  ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்வெட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த கொடுமுடி வட்டார காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர்   தமிழ்மணி, மற்றும் கல்வெட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த  கொடுமுடி திமுக ஒன்றிய பிரதிநிதி  ராஜசேகர் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை புரிந்து கொண்டு  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் திரு. எஸ். டி. செந்தில்குமார்  முன்னிலையில் தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


நடைபெற்ற நிகழ்வின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. எஸ். சௌந்தரம், மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயலாளர் சி. ஆர். கார்த்திகேயன், மாவட்ட செயலாளரும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளருமான பரமசிவம், கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், கல்வெட்டுப்பாளையம் கிளைத்தலைவர் மோகன மூர்த்தி,  கொடுமுடி கிழக்கு ஒன்றிய மண்டல பொதுச் செயலாளர் மயில்சாமி மற்றும் அருண், வெங்கம்பூர் பேரூர் பொறுப்பாளர் கோவிந்த்ராஜ், வர்த்தக அணியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் பி. கோபாலகிருஷ்ணன், கிராம மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சிகாமலை, காசிபாளையம் கிழக்கு மண்டல செயலாளர் இளங்கோ, விருந்தோம்பல் பிரிவின் மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment