ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நீதி மையத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையத்தின் ஈரோடு மாவட்ட, மொடக்குறிச்சி பொறுப்பாளர் ஆர்.சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பகவான், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்வாகனம், சிவகிரியில் செயலாளர் உமாசங்கர், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முருகேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment