தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் மாலை அணிவித்தார் மற்றும் மது இல்லா மாநிலமாக போதைப்பொருள் இல்லாத என கோஷங்கள் எழுப்பப்பட்டது. 


அதன்பின் புஞ்சைபுளியம்பட்டியில் வசிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஏ.சாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக பெரியார் விருது வழங்கப்பட்டது, அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க, அவர்களை கௌரவ படுத்துவதற்காக பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவதும் மரியாதை செய்தனர் ஈரோடு  வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாவட்டத் துணைச் செயலாளர் வாசுதேவன் பவானிசாகர், ஒன்றிய செயலாளர் தங்கவேல், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சஜித் மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன் நகர நிர்வாகிகள் ராஜ கணேஷ் வெங்கடாசலம் மூர்த்தி ஞானபிரபு சுப்பிரமணியம் வெங்கடாசலம் மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவினை புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் தாமோதர சாமி அட்வகேட் தலைமையில் நடைபெற்றது. தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment