உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 154வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று (02/10/2022) ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் ஈரோடு மாநகராட்சி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் உத்தமர் காந்தி அடிகளின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
உடன் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திரு. சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.க. செந்தில்குமார், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்) திரு கு.விஜயகுமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணி உள்பட பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment