மொடக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் விநாயக் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

மொடக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் விநாயக் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில்  விநாயக் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில்  அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விநாயக் பரிசோதனை மையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.


மேலும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்லேண்ட் குழுமத்தின் செண்பகவினோத், விநாயக் பரிசோதனை மையத்தின் நிர்வாகிகள் பழனிசாமி, மணிகண்டன், சேகர், கார்த்திக், டாக்டர் திருமதி.தாரகேஸ்வரி ரவிச்சந்திரன்,டாக்டர் சுதாகர் மற்றும் அபிராமி மருத்துவமனையின் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன் 

No comments:

Post a Comment