புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷக வழிபாடு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷக வழிபாடு.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது. 


இதையொட்டி சென்னி மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னிமலை அடு த்துள்ள மேலப்பாளையம் ஆதிநாராயணப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்த ர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. 


இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர். பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது. 

No comments:

Post a Comment