இக்கோவிலில் பி. மேட்டுப்பாளையம் பகுதி முடி திருத்தும் தொழிலாளர்கள் கோவில் திருவிழாவின் போது முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு மொட்டை அடித்து வரு கிறார்கள். இந்த ஆண்டு பொங்கல் விழாவில் இந்து அறநிலை யத்துறை அதிகாரிகள் முடி எடுக்க டெண்டர் விட்டு ஏலம் நடத்தினார்கள்.
இதில் வெளியூைர சேர்நத முடி திருத்தும் தொழிலாளர்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு முடி காணிக்கை செலுத்தும் டென்டரை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் சவர தொழி லாளர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் சவர தொழிலாளர்கள் சார்பில் இன்று காலை பி.மேட்டுப்பாளையம் கவுந்தப்பாடி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் எதிரில் உண்ணா விரப் போராட்டம் நடை பெற்றது.
இதில் சங்கத் தலைவர் செல்வம் தலைமையில் சவரத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இதில் கலந்து கொண்ட சவரத் தொழிலாளர்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள். இது குறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் பாரம்பரியமாக நீண்ட நாட்களாக மொட்டை அடிக்கும் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் இந்த கோவிலில் ஆண்டு தோறும் மொட்டை அடித்து வருகிறோம்.
அந்த உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அந்த பகுதியில் கவுந்தப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment