கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக கழக 51 ஆவது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கே.வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கே.சி.கணேசன் இனிப்பு வழங்கினார்.
விழாவில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா.கே.பி.தங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் அய்யம்பாளையம் சரவணன், மாவட்ட துணைசெயலாளர் வாசு, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எம். மனோகரன், மாவட்ட தொழில்நுட்ப அணிசெயலாளர் நல்லிவிவேகானந்தன், பாசறை ஒன்றிய செயலாளர் விஜய், உட்பட மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக பெருந்துறை செய்தியாளர் பொன்னுசாமி.
No comments:
Post a Comment