ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 October 2022

ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது   இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இங்கிருந்து வரக்கூடிய நீர்களை உபரி நீராக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது  இந்நிலையில் ஈரோடு உள்பட பல  மாவட்டங்களில் வெள்ளம் அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது, ஈரோடு காவிரி ஆற்றில் கரை ஓரங்களில் பொதுமக்கள் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என்று தீயணைப்புத் துறை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அறிவித்துள்ளனர்.


ஈரோடு காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது இங்கு மட்டுமின்றி காவிரி கரையோரமான பவானி கொடுமுடி போன்ற இடங்களிலும் பொதுமக்கள் இருக்கும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்களை  பாதுகாப்பாக மற்றொரு  இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர் . 

No comments:

Post a Comment